குறைந்த வெயிலின் தாக்கம்! மகிழ்ச்சியில் மக்கள்

69பார்த்தது
குறைந்த வெயிலின் தாக்கம்! மகிழ்ச்சியில் மக்கள்
கோடை காலம் தொடங்கிய போது தருமபுரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. தினமும் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவே பதிவாகி வந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. 2 நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் 88.7 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. கோடை மழையால் வெப்பம் குறைந்து காணப்படுவதால் தருமபுரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி