காங்கிரஸ் எம்எல்ஏ மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

73பார்த்தது
காங்கிரஸ் எம்எல்ஏ மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கேரளாவின் பெரும்பாவூர் தொகுதி எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நெய்யாற்றங்கரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். எல்தோஸ் மீது பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் அளித்துள்ள புகாரில், 28 செப்டம்பர் 2022 அன்று எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தினார். குடிபோதையில் வீட்டிற்கு வந்து தன்னை தாக்கி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு சென்று ஒரு ரிசார்ட்டில் வைத்து பலாத்காரம் செய்தார். புகாரை வாபஸ் பெற்றால் ரூ.30 லட்சம் தருவதாக கூறினார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி