இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

73பார்த்தது
இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18, 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழையும், 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று 104 டிகிரி, நாளை முதல் 19-ம் தேதி வரை 106 டிகிரி, வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம் பகுதிகளில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி