நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணி ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாது என கூறப்பட்டுள்ளது. கடும் இழுபறியில் இருக்கும் 5 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய 3 தொகுதிகளில் கடைசி நேரத்தில் அதிமுக ஜெயிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.