12-ம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க தனியார் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் அனுப்பியுள்ள கடிதத்தில், "பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருப்பதால், பாடத்திட்டங்களை முடிக்க முடியவில்லை. ஆகையால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.