வீட்டுக் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் துணைக் கடன் பெற்றவர் (Co Borrower) அல்லது கடனுக்கான உத்தரவாதம் அளித்தவர் அல்லது சட்ட ரீதியான வாரிசுகளே கடனை திருப்பி செலுத்த வேண்டும். கடனுக்கு இன்சூரன்ஸ் இருக்கும் பட்சத்தில் வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து மீதம் இருக்கும் தொகையை பெற்றுக் கொள்ளும். ஒருவேளை இன்சூரன்ஸ், துணைக் கடன் பெற்றவர், உத்தரவாதம் அளித்தவர் ஆகிய எவருமே இல்லாத பட்சத்தில் அந்த சொத்தை ஏலம் மூலம் விற்பனை செய்ய வங்கிக்கு உரிமை உள்ளது.