அரசு டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக கூறி நேற்று முன்தினம் பா.ஜனதா தரப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பா.ஜனதா தரப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து ஏற்காட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு, முன்எச்சரிக்கையாக நேற்று காலை முதல் ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.