உத்தப்பிரதேச மாநிலம் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித்தின் மகன் முகமது அப்பாஸ் ஹைதருக்கும், பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த ஆன்ட்லீப் சஹ்ரா என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அப்பாஸ் ஹைதருக்கு விசா கிடைக்கவில்லை. இதனால் ஆன்லைனில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் (அக். 18) இரவு ஆன்லைனில் கூடிய இரண்டு குடும்பத்தாரும் இவர்களின் திருமணத்தை நடத்திவைத்தனர்.