பிரபாஸ் படத்தில் இணைந்த 'நிமிர்' பட நடிகை

77பார்த்தது
பிரபாஸ் படத்தில் இணைந்த 'நிமிர்' பட நடிகை
'சீதாராமம்' பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் தற்போது நடித்து வருகிறார். இதில், பிரபாசுக்கு ஜோடியாக அறிமுக நடிகை இமான்வி நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்நிலையில், நடிகை நமீதா பிரமோத் இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை நமீதா பிரமோத் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு உதயநிதி, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'நிமிர்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி