பழனியாபுரத்தில் சாலை பணிகளை ஆய்வு

84பார்த்தது
வாழப்பாடி ஒன்றியம் சிங்கிபுரம் ஊராட்சி, பழனியாபுரத்தில் ரூ. 59. 24 லட்சம் மதிப்பீட்டில், 1. 6 கி. மீ. தூரத்திற்கு முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரத்தை ஊரக வளர்ச்சித்துறை தர கட்டுப்பாட்டு அலுவலர் நாகப்பன், உதவி செயற்பொறியாளர் குமுதா, உதவி பொறியாளர் பார்கவி ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். ஒப்பந்ததாரர் தனசேகரன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி