நாளை எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்

72பார்த்தது
நாளை எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30. 07. 2024 நடைபெற உள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் மூலம் சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு எரிவாயு நுகர்வோர்களுக்கான ஜூலை-2024 மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30. 07. 2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 04. 00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண் 115 மகிழம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதால், சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி