காா்கில் போா் வெற்றியை முன்னிட்டு போரில் உயிா் தியாகம் செய்த போா் வீரா்களின் நினைவாக பெரியாா் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த புகைப்படக் கண்காட்சியை பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ரா. ஜெகந்நாதன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய மேஜா் பி. முத்துக்குமாா் கலந்துகொண்டு பேசினாா்.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியா் ஏராளமானோா் கலந்துகொண்டு காா்கில் நினைவு புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். இந்நிகழ்வில் பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். சதீஷ், திட்ட அலுவலா் டி. இளங்கோவன் மற்றும் பேராசிரியா்கள், மாணவ மாணவியா் கலந்து கொண்டனா்.