இளம்பிள்ளையில் சூரத் புடவை வீதி வீதியாக கூவி விற்பனை.

545பார்த்தது
இளம்பிள்ளையில் சூரத் புடவை வீதி வீதியாக கூவி விற்பனை.
சேலம் மாவட்டம் , இளம்பிள்ளை பகுதியில் தரமற்ற சூரத் சேலை வீதி வீதியாக கூவி விற்பனை செய்து வருகின்றனர். ஈசல் புற்று போல் இளம்பிள்ளையில் சேலை கடைகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ஷாப் கடைகள் என 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளன. இதனால் இப்பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் பெண்கள் டிராவல்ஸ் வண்டி எடுத்துக்கொண்டு புடவை வாங்க அதிக அளவில் வருகின்றனர். இதனை அறிந்து வந்த வியாபாரிகள் இளம்பிள்ளை பகுதியில் நெய்யப்படும் தரமான சேலையை விட்டுவிட்டு தரமற்ற சூரத் சேலையினை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்த வருகின்றனர். மேலும், இளம்பிளையில் நெய்யப்படும் சேலைகள் விற்பனையாகாமல் தேக்கத்தில் உள்ளன. இது குறித்து விசைத்தறி தொழிலாளர்கள் கூறுகையில், எங்களின் வாழ்வாதார தொழிலான விசைத்தறி தொழில் தற்போது மிகவும் நலிவடைந்து உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் இங்கு செய்யப்படும் புடவையை ஜவுளி உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யாமல் குறைந்த விலையில் சூரத்தில் இருந்து சேலையை வாங்கி வந்து இங்கு அதிக லாபம் வைத்து விற்பனை செய்து வருவது தான் காரணம் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி