மது பாட்டிலுக்கு கூடுதல் பணம்! அரசு நடவடிக்கை

80பார்த்தது
மது பாட்டிலுக்கு கூடுதல் பணம்! அரசு நடவடிக்கை
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பல கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. இதை தடுக்கவும், மது பாட்டில்கள் கொண்டுவரப்படும் போது போக்குவரத்தில் ஏற்படும் முறைகேட்டை தவிர்க்கவும், கடைகளில் இருப்பு நிலவரத்தை கண்காணிக்கவும் மது விற்பனையில் டிஜிட்டல் முறை கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த டிஜிட்டல் வசதியை கொண்டு வருவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி