தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மூலமாகவே மது விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் மது பாட்டில்களுக்கு பில் வழங்கப்படுவது இல்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே இந்த நீண்ட கால பிரச்சினைக்கு தற்போது ஒரு வழியாகத் தீர்வு கிடைக்க உள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வரும் தீபாவளி முதல் பில்கள் தரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.