மயிலாடுதுறை: காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவெண்காடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கலை வேந்தன் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பெட்ரோல் குண்டு வீசிய கலைவேந்தனை கைது செய்து ஆக., 2ஆம் தேதி பொறையாறு சிறையில் அடைத்த நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார்.