வீரபாண்டியில் விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

69பார்த்தது
வீரபாண்டியில் விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்
சேலம் மாவட்டம், வீரபாண்டி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் விலைவாசி உயர்வு , மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் கல்பாரப்பட்டி, சேவாம்பாளையம் பகுதியில் வீரபாண்டி  மேற்கு ஒன்றிய செயலாளர் வருதராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில்  வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ ராஜமுத்து , தலைமைக் கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும், இக் கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி , அரியானூர் பழனிச்சாமி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள்செங்குட்டு, துணைத்தலைவர் மணி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன், கல்பாரப்பட்டி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நடராஜன்,   வார்டு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மணிகண்டன் மற்றும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப தலைவர் நடராஜ், கல்பாரப்பட்டி ஊராட்சி முன்னாள் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி