மது போதையில் தகராறு; வாலிபருக்கு கத்திக்குத்து 2 பேர் கைது

69பார்த்தது
மது போதையில் தகராறு; வாலிபருக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டர்குலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 24). இவரது நண்பர் கவுதம்(26). தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது கூடலூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (36). இவரது நண்பர்கள் கண்டர் குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (40), பிரபு (42), சந்தோஷ்குமார் (30) ஆகியோர் மது வாங்க வந்தனர். பின்னர் இருதரப்பினரும் மது வாங்கி ெகாண்டு டாஸ்மாக் கடை அருகில் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது மதுபோதையில் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் நந்தகுமார் தரப்பினர் கவுதமை கழுத்து பகுதியில் கத்தியால் குத்தினர். அதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வெங்கடேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் கவுதமை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி