இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இன்று (மார்ச். 01) முதல் UPI மூலம் காப்பீடு தொகை செலுத்துவது தொடர்பில் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, Bima-ASBA என்ற புதிய முறையில் பிரீமியம் கட்டணம் செலுத்தலாம். இந்த அம்சத்தின் மூலம் பாலிசிதாரர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது தடுக்கப்படும். அதாவது, பாலிசி திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பிரீமியம் தொகை எடுக்கப்படும்.