நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்யாதது ஏன்? என்பது குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் நேற்றிரவு போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பின் பேசிய அவர், நடிகையுடன் பழகியபோது திருமணம் என்ற இடத்திற்கே நகரவில்லை. அந்த உறவு சரிவரவில்லை. 6-7 மாதம்தான் பழகினோம். அதன்பிறகு நான் தொடர்ச்சியாக சிறையில் இருந்தேன். அதன் பிறகு அவருடன் தொடர்பில் இல்லை. 2011 தேர்தல் வந்துவிட்டது அதிமுகவுக்காக பணியாற்றினேன், அவ்வளவுதான் என்றார்.