தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 54). கட்டிட மேஸ்திரி. இவர் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொய்மான்காடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.