சேலம் மாவட்டம் சங்ககிரி பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் நகராஜ். இவரது மனைவி பானுமதி (34) கூலி வேலைக்கு சென்று வந்த இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பானுமதி வீட்டில் சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் வாழப்பாடி அருகே உள்ள விளாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்தையன். இவரது மனைவி திலகவதி(26), 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட திலகவதி கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை முத்துசாமி கொடுத்த தகவலின் பேரில் வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.