ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து அருள்மிகு அங்காளம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.