மருத்துவ கல்வியை மேம்படுத்த ரூ. 87 லட்சத்தில் மாநில மருத்துவ கல்வி மேலாண்மை அமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழே இந்த அமைப்பு செயல்படவுள்ளது. உயர்தரமாகவும், மேம்படுத்தப்பட்ட வகையிலும் கல்வி சேவைகளை வழங்குவது தான் இதன் பிரதான நோக்கம்" என்று கூறப்பட்டுள்ளது.