தங்கப் பத்திர திட்டம் கடந்த 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்க நகைகளை வாங்கி வைப்பதை தாண்டி டிஜிட்டல் முறையில் வைப்பது பாதுகாப்பானதாக தங்க முதலீட்டாளர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் தங்கப் பத்திரத்தால் மத்திய அரசுக்கு வரக்கூடிய வருமானத்தையும் விட திருப்பி கொடுக்கும் செலவு அதிகரித்துள்ளது. இதனால் இத்திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.