ஆடி கிருத்திகை சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை

76பார்த்தது
ஆடி கிருத்திகை சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடி திடல் வளாகத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணியர் கோயிலில் ஆடிகிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆடிகிருத்திகையையொட்டி அருள்மிகு சுப்ரமணியர் சுவாமிக்கும், முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கும் பால், தயிர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

பின்னர் மூலவர் சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் பக்தி பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி