சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தாசநாய்க்கன்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). இவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை குடித்து மயங்கி விழுந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.