ஆபத்தான மின் கம்பம்: பக்தர்கள் அச்சம்

56பார்த்தது
ஆபத்தான மின் கம்பம்: பக்தர்கள் அச்சம்
சேலம் மாவட்டம் பிரசித்தி பெற்ற சித்தர்கோவில் மஹா கும்பாபிஷேகம் வருகின்ற 15ம் தேதியில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவில் கருவறை அருகே இரும்பு மின் கம்பம் உள்ளது, இதில் அடிக்கடி மின்கசிவு ஏற்பட்டு குரங்குகள் அதிக அளவில் இறந்துள்ளன. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க இரும்பு மின் கம்பத்தை அகற்றி சிமெண்ட் கம்பம் அமைக்க வேண்டும் என பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி