சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டுக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி குடிநீர் ஜம்பு அருகில் மின் கம்பி கீழே தாழ்வாக தொங்கியபடி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாகவே பள்ளிக் குழந்தைகள் காலை, மாலை நேரங்களில் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். எனவே விபத்து நடக்கும் முன் இளம்பிள்ளை மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.