வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,264 ஆக அதிகரிப்பு

75பார்த்தது
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,264 ஆக அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 3, 257 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த மாதம் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டார்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 3, 257 வாக்குச்சாவடிகளில் தேவைக்கு ஏற்ப புதிதாக 7 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும். 39 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 10 வாக்குச்சாவடிகளை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யவும், 19 வாக்குச்சாவடிகளை கட்டிட மாற்றம் செய்யவும் வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு இருந்தது.

இதன்மீது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுபற்றி கருத்துகள் தெரிவிக்க கடந்த 4-ந் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட் டது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் வரப்பெற்றன. இவை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டு பரிசீலனை செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்ட சபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,264ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி