சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் ராஜேந்திர சத்திரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சேலம் மாநகராட்சியில் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
சூரமங்கலம் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் 476 தூய்மை பணியாளர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது என்று கூறினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினார். இதில் ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், துணை மேயர் சாரதாதேவி, மாநகர நல அலுவலர் மோகன், மண்டல குழுத்தலைவர் கலையமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.