சேலம் அரசு நீச்சல் குளத்தில் கோடைகால பயிற்சி முகாம்

84பார்த்தது
சேலம் அரசு நீச்சல் குளத்தில் கோடைகால பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்ட பயிற்சி முகாம் ஏப்ரல் 1 முதல் 14ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதனை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விளையாட்டுத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி