சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 11-வது வார்டுக்கு உட்பட்ட என். ஜி. ஜி. ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை கேட்கும் முகாம் நேற்று நடந்தது. வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. , மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கைகள் வைத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரும்படி அறிவுறுத்தினர். பின்னர் வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் இந்துஜா, தி. மு. க. பகுதி செயலாளர் மோகன், வார்டு செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.