சேலத்தில் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை

67பார்த்தது
சேலத்தில் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அமரகுந்தி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள கிணற்றில் வெங்கடேசின் பிணம் கிடந்தது. இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வெங்கடேசுக்கு கடன் அதிகமாக இருந்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி