சேலம்: மாவட்டம் முழுவதும் 312 தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி

71பார்த்தது
சேலம்: மாவட்டம் முழுவதும் 312 தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடைகள் மாவட்டம் முழுவதும் வைக்கப்படும். இதற்காக தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டும். பட்டாசு கடைகள் வைக்க விருப்பம் தெரிவித்து பலர் விண்ணப்பித்தனர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: -
சேலம் மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கி கோரி 514 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் மீது ஆய்வு நடத்தி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க இது வரை 312 மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மீதி உள்ள 202 மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது.

இதில் விதிமுறைகளுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். மேலும் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தீவிபத்து இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டிய வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி