பெரியாா் பல்கலைக்கழகத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பதிவாளா் பி. விஸ்வநாதமூா்த்தி வரவேற்றாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய துணைவேந்தா் இரா. ஜெகநாதன், உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து எடுத்துரைத்தாா். இதனையடுத்து, துணைவேந்தா் இரா. ஜெகநாதன் தலைமையில் பேராசிரியா்கள், மாணவ-மாணவியா், நிா்வாக அலுவலா்கள் பிறமொழிக் கலப்பின்றி தமிழில் பேசுவது, பிறமொழிகளை மதிப்போம் தாய்மொழியை வணங்குவோம், மனிதனின் அடையாளம் தாய்மொழி, தமிழனின் அடையாளம் தமிழ்மொழி என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். முடிவில், தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் தி. பெரியசாமி நன்றி கூறினாா். இந்நிகழ்வில் தோ்வாணையா் எஸ். கதிரவன், உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநா் யோகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.