களஞ்சியம் கல்யாண மாலை புதிய அலுவலகம் திறப்பு விழா

85பார்த்தது
களஞ்சியம் கல்யாண மாலை புதிய அலுவலகம் திறப்பு விழா
சேலம் இரும்பாலை சாலை, மோகன் நகரை அடுத்த ஓம் சக்தி நகர் பிரதான சாலை காளியம்மன் கோவில் பகுதியில் களஞ்சியம் கல்யாண மாலை என்ற பெயரில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு களஞ்சியம் தமிழ் கலை பண்பாட்டு குழு நிறுவனரும், சேலம் மாநகராட்சி செயற்பொறியாளருமான பழனிசாமி தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை குத்து விளக்கேற்றி வைத்து திறந்து வைத்தார்.
இது குறித்து செயற்பொறியாளர் பழனிசாமி கூறும் போது, களஞ்சியம் கல்யாண மாலை அனைத்து சமூகத்தினருக்குமானதாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை வழங்க வேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் கல்யாண சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கி உள்ளோம். அதன்படி இல்லம் தேடி வரண் என்ற அடிப்படையில் எங்கள் பணி இருக்கும் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி