சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மலர்கொடி. இவர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் கட்ட வேண்டும் என்றும் சேலத்தை சேர்ந்த லட்சுமணன் (46) மற்றும் நண்பர் தனசேகர் (36) ஆகிய 2 பேர் கூறினர். இதை நம்பி 2 தவணைகளில் ரூ. 9 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்தேன். பல மாதங்கள் ஆகியும் அரசு வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை தருமாறு கேட்டதற்கு ரூ. 50 ஆயிரம் மட்டும் கொடுத்தனர். மீதி பணம் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு அம்மாபேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன், தனசேகர் ஆகிய 2 பேரை கைது செய்தார்.