சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழையால் காற்று மாசு குறைந்துள்ளது. காலை 5 மணி நிலவரப்படி காற்றின் தர குறியீடு ஆலந்தூரில் 72ஆகவும், பெருங்குடியில் 71ஆகவும் , அரும்பாக்கத்தில் 70ஆக பதிவு 5மணி நிலவரப்படி காற்று மாசு குறைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் படிப்படியாக உயரும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், போகி பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளதால் மேலும் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.