சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 47), பிரபல பாத்திர கடையின் உரிமையாளரான இவரை மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் சில போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கிருபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து அதை பரிசீலித்து கிருபாகரனை 2-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருபாகரன் ஏற்கனவே 2016-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.