திருச்சி: தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் விநாயகர், பகவதி அம்மன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவுபெற்றது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்றது. புனித நீர் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, யாக சாலை பிரவேசம், நாடி சந்தானம், கலச பூஜை, கணபதி ஹோமம், யாகவேள்வி, நவகிரக யாகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கோயில் கோபுர கலசத்திற்கு ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேம் செய்தனர்.