கிழக்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

72பார்த்தது
கிழக்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் கிழக்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சேலம் கிழக்கு கோட்ட மின்சார வாரிய இயக்கம், பராமரிப்பு அலுவலகம், உடையாப்பட்டி, காமராஜர் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை தோறும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான (ஜூன்) குறை தீர்க்கும் கூட்டம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. எனவே கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி