சேலம்: சிறுநீரகம் குறித்த புத்தகம் வெளியிட்ட டாக்டர்களுக்கு விருது

57பார்த்தது
சேலம்: சிறுநீரகம் குறித்த புத்தகம் வெளியிட்ட டாக்டர்களுக்கு விருது
சேலம் கோபி மருத்துவமனை டாக்டர்கள் ஜோன்ஸ் ரொனால்ட், ஹரி ஜானகிராமன் ஆகியோர், சிறுநீரக பாதிப்புகள்-கேள்விகளும், பதில்களும் என்ற புத்தகத்தை எழுதி இருந்தனர். இந்த புத்தகம் சிறுநீரகம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் எளிய தமிழ் நடையில் விடை அளிப்பதாக இருப்பதால் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த புத்தகத்தை வெளியிட்ட டாக்டர்கள் ஜோன்ஸ் ரொனால்ட், ஹரி ஜானகிராமன் ஆகியோரை பாராட்டி இந்திய மருத்துவ சங்கம் விருது வழங்கி உள்ளது. இந்த விருது வழங்கும் விழா சேலம் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடந்தது. விழாவில் டாக்டர் ஜோன்ஸ் ரொனால்ட் கலந்து கொண்டு விருதை பெற்றுக்கொண்டார். விருதை இந்திய மருத்துவ சங்க தலைவர் சாது பக்தாசிங், செயலாளர் ஏ. எஸ். குமார், பொருளாளர் நரேந்திரன் மற்றும் பொறுப்பாளர்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி