மாநகராட்சி கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

72பார்த்தது
மாநகராட்சி கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சேலம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. மேயர் ராமச்சந்தின் தலைமை தாங்கினார். ஆணையாளர் ரஞ்ஜீத்சிங், துணைமேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்
அ. தி. மு. க. கொறடா செல்வராஜ், விதிமீறிய கட்டிடங்களுக்கு ஒரு முறைதான் அபராதம் விதிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வரி வசூலிக்கும் போதும் அபராதம் சேர்த்து வசூலிக்கிறார்கள். இது அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இல்லாதது.
அ. தி. மு. க. எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, எனது வார்டுக்கு ஆய்வுக்கு வருவது எனக்கு தெரியப்படுத்துவதில்லை. ஆய்வு என்ற பெயரில் நான் இல்லாதபோது, என் மீது பழியை போடுகிறார்கள் என்று மேயரை பார்த்து கூறினார். அப்போது மேயர் ராமச்சந்திரன் அதுபோல் எதுவும் நடைபெற வில்லை என்று கூறினார்.
அப்போது தி. மு. க. கவுன்சிலர்கள் சாந்தமூர்த்தி, தெய்வலிங்கம், மூர்த்தி, இளங்கோ உள்ளிட்ட பலர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் யாதவமூர்த்தி, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராக 2 முறை பணியாற்றிய சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வராததை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் வெளி நடப்பு செய்கிறோம் என்று கூறினார். இதையடுத்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு அ. தி. மு. க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி