ஓணம் பண்டிகை ரத்து: வெள்ளிக்கொலுசு உற்பத்தி பாதிப்பு

67பார்த்தது
ஓணம் பண்டிகை ரத்து: வெள்ளிக்கொலுசு உற்பத்தி பாதிப்பு
சேலத்தில் குகை, மணியனூர், சிவதாபுரம், பனங்காடு, அரியாகவுண்டம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
வெள்ளியில் செய்யப்படும் கால் கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி, கொடி, காமாட்சி விளக்கு, குடம் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தி செய்து கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆண்டு தோறும் கேரளாவில் நடக்கும் ஓணம் பண்டிகைக்காக அங்குள்ள வியாபாரிகள் மூலம் சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும். ஆனால் சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அங்கு பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதேசமயம், எளிமையான முறையில் ஓணம் கொண்டாட கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவில் இருந்து வழக்கமாக வரக்கூடிய வெள்ளிக்கொலுசு ஆர்டர்கள் வராததால் சேலம் பகுதியில் உள்ள வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அதாவது, சேலத்தில் வெள்ளிக்கொலுசு உற்பத்தி சுமார் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி