ஆசிரியர் தினத்தையொட்டி அன்பின் கரங்கள், மாற்றுத்திறனாளி அறக்கட்டளை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்க் சார்பில் சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா அழகாபுரம் பெரியபுதூர் பள்ளியில் நடந்தது. விழாவில், அருள் எம். எல். ஏ. கலந்து கொண்டு பள்ளியில் கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறுவதற்கு கடுமையாக ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும் அவர், கணித ஆசிரியை ஜெபிலா, சமூக அறிவியல் ஆசிரியை ரஞ்சனி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகங்களை அருள் எம். எல். ஏ. வழங்கி நன்றாக படித்தடவும், ஆசிரியர்கள், பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ரோட்டரி கிளப்ஆப் சேலம் விங்க் சார்பில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.