சேலம் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி மோசடி செய்த 4 பேர் கைது

68பார்த்தது
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ராஜேஷ். 30 இவரது மனைவி சத்யபாமா, 25 ராஜேஷ், சத்தியபாமாவும் இணைந்து சேலம் சுவர்ணபுரி அய்யர் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் நிறுவனத்தில் படித்த, படிக்காத அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக பகுதி நேரம், முழுநேரம் வேலை செய்தால் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது.
இதை அறிந்த சேலம் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் விண்ணப்பித்தனர் அப்போது, நிறுவனத்தில் சேருவதற்கு ஒரு நபருக்கு ரூ. 3, 500 செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் நபருக்கு பெரிய சில்வர் பாத்திரமும், வாரம் ரூ. 650 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம், ரூ. 1 லட்சம், ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட மாதத்தில் பணம் இரட்டிப்பு தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பிய ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதுவரை கோடிக்கணக்கில் முதலீடு பெற்றுள்ளனர்
இந்த நிலையில் இயக்குனர்கள் ராஜேஷ், சத்தியபாமா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி