155 அடி உயர லட்சுமி சிலை பாதத்தில் செம்பு தகடு பதிப்பு

84பார்த்தது
155 அடி உயர லட்சுமி சிலை பாதத்தில் செம்பு தகடு பதிப்பு
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. இங்கு 155 அடி உயரத்தில் விஸ்வரூப செல்வ லட்சுமி சிலை கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி லட்சுமி சிலையின் பாதத்தில் செம்பு தகடு பதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி கலந்து கொண்டு லட்சுமியின் பாதத்தில் செம்பு தகடு பதிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக கோவிலில் கணபதி, லட்சுமி யாகம் நடைபெற்றது.

மேலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் செம்பு தகடு வாங்கி லட்சுமியின் பாதத்தில் பதித்தனர். கோவிலில் காலை முதல் மதியம் வரை பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி