சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், கே. ஆர். தோப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆலயத்தில் நேற்று ஆடிமாத 2-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருமாங்கல்ய மஞ்சள் கயிறுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.