சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு வருகை தந்த மாணவிகளின் கருப்பு நிற துப்பட்டா, குடை, பேக் ஆகியவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், “திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. இது என்ன விதமான சர்வாதிகாரம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.